அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும்
குவித்துவிடுகின்றன.
வேளை தவறாமல்
உணவை ஊட்டிவிடுகின்றன.
எப்போதும் ஒட்டி,
மகிழ்விக்க முயல்கிறது.
புறம் பேசவும்,
விளையாடவும்,
வியர்வை சிந்தவும்
தேவையில்லை இனிமேல்.
முடிந்துவிடுகிறது.
என் வேண்டுதலுக்காக யாரோ
கொழுக்கட்டை செய்கிறார்கள்.
அடங்காமல் இருக்கின்றன.
பிரார்த்தனைகளும் பல புதுப்
பிறவிகள் எடுக்கின்றன.
உழைத்தால்தான்
வருகிறது.
எப்போதாவது உழைக்கலாம்.
அரைப்பொழுது உழைக்கலாம்.
உழைப்பவனை உழைக்கச் சொல்லி
உழைக்கலாம்.
அறிவு கொண்டு உழைக்கலாம்.
ஏமாற்றியும் காசு சேர்க்கலாம்.
எல்லாவற்றையும் மாற்றிடுமாம்.
வேலை எளிதாகிவிடுமாம்.
நிறைய நேரம் மிச்சமாகுமாம்.
எஞ்சிய நேரத்தை?
அனைத்தையும் வாசலில் குவிக்கும்.
ஆளில்லா சிற்றுந்துகள்
உணவை பரிமாறும்.
உழைக்க வேலை?
சீல் குத்தும் அந்த வேலை?
“உள்ளே போங்க” என்று
சொல்லும் அந்த வேலை?
பூ விற்கும் வேலை?
வெள்ளரி குவிக்கும் வேலை?
“யாரைப் பார்க்கணும்?” என்கிற வேலை?
“அம்மா இல்லை” என்கிற வேலை?
தேவைதானா?
மரங்கள் சொல்வதென்ன?
முட்டாளாய் பல துறைகளிலும்
வாழ்வது வரமில்லையோ?
வாழ்க்கை சில ஆயிரம் பேருக்கேயானதா?
தன்னை உயர்த்தி
உலகை ஆள முயல்கிறோம்.
இன்னும் பல தொழில்நுட்பங்கள் தோன்றும்.
அவற்றை அடக்கும் அறிவு
நமக்கிருக்குமா
என்று தெரியவில்லை.
அல்லது “AI”-யை வேண்டுவோமோ,
நேர்த்திக்கடன் பல செய்வோம்
புது உலகில்.
நல்வழி காட்டும்.
மெய்யறிவு மட்டுமே
மகிழ்வைக் கூட்டும்.