அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும்
வாசலில் அனைத்தையும்
குவித்துவிடுகின்றன.
குவித்துவிடுகின்றன.
ஸ்விக்கியும் ஸோமாட்டோவும்
வேளை தவறாமல்
உணவை ஊட்டிவிடுகின்றன.
வேளை தவறாமல்
உணவை ஊட்டிவிடுகின்றன.
பொழுதுபோக்கும் என்னோடே
எப்போதும் ஒட்டி,
மகிழ்விக்க முயல்கிறது.
எப்போதும் ஒட்டி,
மகிழ்விக்க முயல்கிறது.
பார்த்து பழகவும்,
புறம் பேசவும்,
விளையாடவும்,
வியர்வை சிந்தவும்
தேவையில்லை இனிமேல்.
புறம் பேசவும்,
விளையாடவும்,
வியர்வை சிந்தவும்
தேவையில்லை இனிமேல்.
நேர்த்திக்கடனும் ஆன்லைனில்
முடிந்துவிடுகிறது.
முடிந்துவிடுகிறது.
யாரோ தேங்காய் உடைக்கிறார்கள்.
என் வேண்டுதலுக்காக யாரோ
கொழுக்கட்டை செய்கிறார்கள்.
என் வேண்டுதலுக்காக யாரோ
கொழுக்கட்டை செய்கிறார்கள்.
ஆசையும் பயமும்தான்
அடங்காமல் இருக்கின்றன.
பிரார்த்தனைகளும் பல புதுப்
பிறவிகள் எடுக்கின்றன.
அடங்காமல் இருக்கின்றன.
பிரார்த்தனைகளும் பல புதுப்
பிறவிகள் எடுக்கின்றன.
இன்றும் காசு மட்டும்
உழைத்தால்தான்
வருகிறது.
உழைத்தால்தான்
வருகிறது.
வீட்டிலே உழைக்கலாம்.
எப்போதாவது உழைக்கலாம்.
அரைப்பொழுது உழைக்கலாம்.
உழைப்பவனை உழைக்கச் சொல்லி
உழைக்கலாம்.
அறிவு கொண்டு உழைக்கலாம்.
ஏமாற்றியும் காசு சேர்க்கலாம்.
எப்போதாவது உழைக்கலாம்.
அரைப்பொழுது உழைக்கலாம்.
உழைப்பவனை உழைக்கச் சொல்லி
உழைக்கலாம்.
அறிவு கொண்டு உழைக்கலாம்.
ஏமாற்றியும் காசு சேர்க்கலாம்.
“AI” — செயற்கை நுண்ணறிவு —
எல்லாவற்றையும் மாற்றிடுமாம்.
வேலை எளிதாகிவிடுமாம்.
நிறைய நேரம் மிச்சமாகுமாம்.
எல்லாவற்றையும் மாற்றிடுமாம்.
வேலை எளிதாகிவிடுமாம்.
நிறைய நேரம் மிச்சமாகுமாம்.
என்ன செய்வது
எஞ்சிய நேரத்தை?
எஞ்சிய நேரத்தை?
ரோபோட்களும் ட்ரோன்களும்
அனைத்தையும் வாசலில் குவிக்கும்.
ஆளில்லா சிற்றுந்துகள்
உணவை பரிமாறும்.
அனைத்தையும் வாசலில் குவிக்கும்.
ஆளில்லா சிற்றுந்துகள்
உணவை பரிமாறும்.
காசு மட்டும் தேவை —
உழைக்க வேலை?
உழைக்க வேலை?
புடவைக்கடையில்
சீல் குத்தும் அந்த வேலை?
சீல் குத்தும் அந்த வேலை?
பொது கழிப்பறையில்
“உள்ளே போங்க” என்று
சொல்லும் அந்த வேலை?
“உள்ளே போங்க” என்று
சொல்லும் அந்த வேலை?
பிளாஸ்டிக் பொறுக்கும் அந்த வேலை?
பூ விற்கும் வேலை?
வெள்ளரி குவிக்கும் வேலை?
“யாரைப் பார்க்கணும்?” என்கிற வேலை?
“அம்மா இல்லை” என்கிற வேலை?
பூ விற்கும் வேலை?
வெள்ளரி குவிக்கும் வேலை?
“யாரைப் பார்க்கணும்?” என்கிற வேலை?
“அம்மா இல்லை” என்கிற வேலை?
இத்தனை ஆக்கத்திறன்
தேவைதானா?
தேவைதானா?
பல கோடி விதைகள் கொண்ட
மரங்கள் சொல்வதென்ன?
மரங்கள் சொல்வதென்ன?
சராசரியாய் சில துறைகளிலும்,
முட்டாளாய் பல துறைகளிலும்
வாழ்வது வரமில்லையோ?
முட்டாளாய் பல துறைகளிலும்
வாழ்வது வரமில்லையோ?
வலியதே நிலைக்குமெனில்,
வாழ்க்கை சில ஆயிரம் பேருக்கேயானதா?
வாழ்க்கை சில ஆயிரம் பேருக்கேயானதா?
இன்னும் கல்வி, செல்வம், வீரம் கொண்டு
தன்னை உயர்த்தி
உலகை ஆள முயல்கிறோம்.
தன்னை உயர்த்தி
உலகை ஆள முயல்கிறோம்.
ஏழு கோடியை அடக்க
இன்னும் பல தொழில்நுட்பங்கள் தோன்றும்.
அவற்றை அடக்கும் அறிவு
நமக்கிருக்குமா
என்று தெரியவில்லை.
இன்னும் பல தொழில்நுட்பங்கள் தோன்றும்.
அவற்றை அடக்கும் அறிவு
நமக்கிருக்குமா
என்று தெரியவில்லை.
இறைவனை வேண்டுவோமோ,
அல்லது “AI”-யை வேண்டுவோமோ,
நேர்த்திக்கடன் பல செய்வோம்
புது உலகில்.
அல்லது “AI”-யை வேண்டுவோமோ,
நேர்த்திக்கடன் பல செய்வோம்
புது உலகில்.
நல்மனம் மட்டுமே
நல்வழி காட்டும்.
மெய்யறிவு மட்டுமே
மகிழ்வைக் கூட்டும்.
நல்வழி காட்டும்.
மெய்யறிவு மட்டுமே
மகிழ்வைக் கூட்டும்.
No comments:
Post a Comment