தலைவி, பொருளீட்ட சென்ற தலைவன் குறித்து, இரங்கியது
வேனில் வெள்ளரி படர்ந்திட வருவயோ
மேனி வருந்திட
வளைகுடா வளர்ந்திட விரிகுடா வாழ்த்திட
மெய்யுதிர் வியர்ப்புட னுயிருமிழ் கலுழிசேர்
பொய்யா பேரற
னீன்பொருள் பெருக்கியே
மின்னணு காட்டிடும் முருகுடை நின்முகம்
உனுள்ளமும் கூடவே மதுரமாய் வழிந்திடும்
எனினும் தொட்டுண்டு நுகரா புலமழியுமே
நின்றும் வீழ்கிறேன் வென்றும் தோற்கிறேன்
உன்னுரு வேறிய நமன்பு பாய்ந்த
நன்மகன் வேண்டுமே நல்லறம் போற்றவே
No comments:
Post a Comment