யாகம் இயற்றினேன்
யாவரும் உய்ய
அக்னி வளர்த்தேன்
அகிலம் உயர
பூமியை திருத்த புதிதாய் பிறந்தேன்
என்ற எண்ணத்தில் நான் துணிந்தேன்
புழுதியை விரட்டும் புனிதப்பணியில்
என் கரத்தைக் கறைப்படுத்த எழுந்தேன்
மனித மனத்தை வகைப்படுத்தி கூறிட்டேன்
எண்ண அலைகளை இறுமாப்பில் அலகிட்டேன்
மரபுகள் மாண்புகள் எனக் கதைகூறி
என் உணர்வை உயர்த்திட்டேன் ஒய்யாரமாய்
யாக முழுமைக்கு ஓர்பலி வேண்டும்
தனிமையில் எண்ணத்தை சிறைப்படுத்தி தெளிந்தேன்
யாரிவன் யாகம் எழுப்பவென்று உணர்ந்தேன்
தனல் எறிகிறது என்னை விழுங்கி !!