Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Monday, August 07, 2023

ஈண்டுநீ அருளாது ஆண்டுறைத் தல்லே

 திணை: மருதம்


சிறுவூடல்

(தலைவியின்  கூற்று)

 

தொழில்

தொழிற்றொழி லெனக்குறுந்  தொடிதுறந் திளம்பொழு

தொழிந்தே யிராப்புகு விளைஞ மறந்தனை

பூண்டுள நகையுதிர்  பயன்மொழி யதனால்

ஈண்டுநீ யருளா தாண்டுறைத் தல்லே 


முதலுணவு

வயற்கயல் வெண்நெ லடிசல் வைகறை

துயிலறுக் கண்தீக்  கொய்து   துப்பாய 

மேயெரு தன்ன யுண்டாய் கேட்பின்

தாய்கை மணமில் லென்றாய் மன்னவ 

நீண்டு மொழியேன் பெருஞ்சொல் பாராட்டின்

யீண்டுநீ யருளா தாண்டுறைத் தல்லே 


ஆடற்தலைவியின் ஊடல்

(மற்ற பெண் தலைவன் இழிப்பேச்சிற்கு ஊடி உரைத்தது)

 

தீண்டி யுரைத்துள முருக்கினை மாதவி

மாண்டிடக்  குலத்தாற் பழித்தனை

யீண்டுநீ யருளா தாண்டுறைத் தல்லே


Tuesday, August 01, 2023

விரைந்திடு வானூர்தியே

 


இன்விண் வாழ்த்தி முந்தி அழிதுளி

நனைந்து மண்காணா பல்பூ வனப்பை

விண்கண்டு கானிசை யோர்ந்து 

தண்கார் கவிந்தவிர் காதலி சேர்தேரே

பெரிதுவக்கும் தாய்

 (தலைவனும் தலைவியும் இருந்து இயற்றும் இல்லறம் குறித்து செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது)

முல்லைத் திணை



மென்வான் பாடி வாய்வழி ய‌ழிதுளி

முன்றில் பெயில மென்கரந் நீட்டிக்

கொண்டதும் இளந்தாய் முகமுதற  கொன்றைக்

கண்ணியோ வெனகிறங்கு வண்டு விலக்கி

திண்டோ ளணைப்பான் மறிபிணையை தாயே