Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Saturday, November 04, 2006

யாகம் எழுப்பினேன்

யாகம் இயற்றினேன்
யாவரும் உய்ய
அக்னி வளர்த்தேன்
அகிலம் உயர

பூமியை திருத்த புதிதாய் பிறந்தேன்
என்ற எண்ணத்தில் நான் துணிந்தேன்
புழுதியை விரட்டும் புனிதப்பணியில்
என் கரத்தைக் கறைப்படுத்த எழுந்தேன்

மனித மனத்தை வகைப்படுத்தி கூறிட்டேன்
எண்ண அலைகளை இறுமாப்பில் அலகிட்டேன்
மரபுகள் மாண்புகள் எனக் கதைகூறி
என் உணர்வை உயர்த்திட்டேன் ஒய்யாரமாய்


யாக முழுமைக்கு ஓர்பலி வேண்டும்
தனிமையில் எண்ணத்தை சிறைப்படுத்தி தெளிந்தேன்
யாரிவன் யாகம் எழுப்பவென்று உணர்ந்தேன்
தனல் எறிகிறது என்னை விழுங்கி !!

Saturday, October 14, 2006

கவிதையா? பாடலா?

கவிதை எழுதினேன் காதலிக்கு
அவள் அறியா எந்தாய் மொழியில்
காட்டினால் இசைத்திடென்றாள்
அறிந்திடேன் இசைஇலக்கிணம்

மலர்களின் மென்மை அவளுக்கும் பிடிக்கும்
மங்கையும் அதுதான் என்றேன் புரியாமல் விழித்தாள்
நிலவும் இரவும் அவளுக்கும் மயக்கந்தான்
நீதான் என்றால் சிரித்து விலகினாள்

பாடலை பிரித்து பதம் பார்க்கிறாள்
எழுத்துகளுக்கு ஏதொ பெயர் சூட்டுகிறாள்
பார்க்கிறேன் ஏறேடுத்து அவள் கவிதைத்தான்
எப்படியிருந்தாலும் இசையும் இனிமைத் தான்

இப்படியாக வேறுபாடுகளிருந்தும் காதலிக்கிறேனிவளை
ஒத்ததிர்வு தேடுகிறேன் உண்ர்வுப்பூர்வமாய்
மொழித் தான் புரியவில்லை மனம் கூடவா?
மவுனத்திற்கு வாய் வைக்க மறந்தது யார்?

இரவுக்கும் பகலுக்குமிடையே

சிந்தித்து பார்த்தேன் தோழி
சிலமணி நாம்
சந்தித்தால் என்னவென்று
சிந்தித்து பார்த்தேன் தோழி

எக்காளமிட்டேன் அடி
முக்காலம் உன்னோடு
முழுசாக நானிருப்பேனென
எக்காளமிட்டேன் அடி

கைத்தட்டி சிரித்தேனடி
நின் மெய்த்தட்டி மயங்கி
மெதுவாக கண்விழித்தேனென
கைத்தட்டி சிரித்தேனடி

கவிதைக்கு தாளெடுத்தேன் தோழி
கருவாய் உன்னுருவை மெதுவாய்
வருடி வாஞ்சையாய் உச்சிமுகர
கவிதை பிறந்ததடி தோழி

ஊர்வலம் செல்வோமடி
ஊர்கதை சொல்லவா நீ
உள்ளத்தில் விளக்கேற்று அடியே
மெள்ளமாய் உனை நுகர்வேன் அந்நொடியே

“கனவுகள் கலையட்டும்
காட்சிகள் தொடங்கட்டும்
கேசம் கலைந்து கட்டிலில் புரண்டது போதும்
மோசம் போகும்முன் போர்களம் புகுந்திடுவோம் !!”

Sunday, October 01, 2006

பராபரமே


நினைவுகள் நகர நெஞ்சம் கனக்கிறது
நிலையற்ற பொழுதினில் நானிருந்த தடயங்கள்
நீர்கசியும் விழிகள் நெகிழ்ச்சியாய் இதயம்
நிறைந்த நின்னூடகம் நினைவுறுத்தியது நீயிருப்பதை

தாயாக தமிழாக உயிரோடு தழுவினாய்
தனியாக திளைத்த தருணங்கள் எனக்கேது?
சுதந்தர மூச்சோடு பெருந்திடம் வழங்கினாய்
சுயபெருமைக்கு இங்கெது சிந்தையில்?

உனது பெருமகிழ்ச்சி எனது வளர்ச்சி
உனது பரிசு எனது மனிதர்கள் பதவிகள்
நம்பிக்கையூட்டுகிறாய் தனியாளாய் புவிவெல்ல !
நானறியாது ஏந்துகிறாய் தடுக்கிவீழ் நேரங்களில் !!

அறிவிற்கு புலப்படா ழ்ந்த பரம்பொருளே
அடியேனின் வாழ்வு உன்பேரிசையில் சிறுதாளமோ?
பேராற்றலின் அதிர்வோட்டம் எனது உயிரோட்டமோ?
பரந்த சகவாழ்வும் சமவாழ்வோ? அதுவொன்றோ?

இனி

வாழ்க்கையோர் போராட்டம் என தயாராவதா?
விளையாட்டென விதிகளை சரி பார்க்கவா?
சிரச்சுமையென கடன் கழிப்பதா?
சுலபமாய் சிரிப்புடன் எதிர்கொள்வதா??

..இராசிரா

Saturday, September 23, 2006

தேடல்.................

சில சமயம் உள்ளத்தில் பெருநிறைவு
சிந்தைக்கு புலப்படாத அ¡ழுணர்வு
தேடுகிறேன் எதற்காகவோ எதையோ
தளர்வதில்லை; உணர்வுகளை அள்ளிக் கோர்கிறேன் !!

வீசுத்தென்றலும் பொழியும் பால்நிலவும்
வண்ணத்தமிழிசையும் வருடும் இளமாலையும்
கொஞ்சும் மழலையும் கொழிக்கும் காவியமும்
நெஞ்சை நிறைத்ததா நினைவறியா உணர்வுகளால்?

நிறைவேறுபாடா? அழுத்த வேறுபாடா?
பகிர்ந்த கொள்ள பக்கம் பார்க்கிறேன்
நடப்பவை அறிய ஏதேதோ தேடுகிறேன்
புரியாமல் போகவே கவிதை செய்கிறேன்

கவிதை சரியான வடிகால் தான்
உடலுடன் கலந்த உயிர்த்துடிப்பு !
உரமிக்க சொற்களுடன் உணர்வுடன் கலவி
கண்டறியா காரணத்தின் நிறைவினை இரசிக்கிறேன் !!

உளமும் உணர்வும் மிகவும் இலேசாகிறது
உண்டு பசிதீர்த்த குழந்தையை விட!
கலவி காதல் தணித்த காதலரை விட !!
கொஞ்சும் பிஞ்சை பிரசவித்ததை விட !!!

நினைவுகளில் ஏனோ ஓர் வெறுமை
நிற்பதும் கடந்ததும் அழிந்த நிலைமை
புதிதாக சிந்திக்க வடிவெடுக்க புறப்படுகிறேனோ
பறந்து வாகைசூடும் பட்டாம்பூச்சிப் போல்?

மவுன நிலையா தியான நிலையா?
மனம் கடந்தவரின் மன நிலையா?
சிந்தனை தடைப்பட்ட போதை நிலையா?
சிறை உடைத்ததுவா? சிக்கிக் கொண்டதுவா??

நீடிக்கும் நாழியளவு அறியாதழிகிறது
நினைவில் புதுவூற்றும் புறப்படுகிறது
தேடல் தொடற்கிறது விடுகதையாக
தேக்கி வைப்போம் அடுத்தமுறை வரை !!

-- இராசிரா....

Monday, September 18, 2006

கவித்துளிகள்

அதிகாலைச் செஞ்சூரியன்

பனிஷவரில் குளிக்கும் பூமிப்பெண்
வானச் சுவற்றில்
ஒட்டி வைத்த
ஸ்டிக்கர் பொட்டு !!!

மலர்

மலர்களே சிறிது மவுனமாயிருங்கள்
மெளனத்திற்கு முதலில் வார்த்தை தேடுகிறேன்!
மலர்ச்சிக்கு பின் எழுத்து வடிக்கலாம்!!


அந்திநேர வானம் (அல்லது) திராவிடம்

நெருப்பு பாளமாய் மேகங்கள்
நிலவை பூக்குழியிறங்க உத்தரவிட்டது யார்?
கறுப்புச்சட்டை தறிக்கிறது வானம் !!


நாத்திகமா? த்திகமா? (அல்லது) அந்திநேர வானம்

ஒருவர்: விண்ணிலே பெருஞ்சித்திரம் !
இரண்டாமவர்: கையெழுத்தை தேடுகிறேன்
ஒருவர்: பாராட்ட வேண்டும்!!
இரண்டாமவர்: ஓவியத்தையா? ஓவியனையா?

-இராசிரா

Saturday, September 16, 2006

காதலிக்கு ஓர் கடிதம்

காத்திருந்த காதலுடன்
கனத்த மனத்துடன்
காதலிக்கு வரைகிறேன்
கடைசி கடிதம்.

பெண்களால் வீழ்ந்த சரித்திரம் பலவுண்டு
புதிதாய் ஓர் அத்தியாயம் ஏன்?
என் வீழ்ச்சியில் உனை தூற்றினால்
எனக்கிழுக்கு - வீழவும் சம்மதமில்லை!

இங்கேயே தங்கிவிடுகிறேன்
இனி உன்னிடம் வரப்போவதில்லை!
புது உலகம், புது வாழ்க்கை
புதிய பெண் - மனைவியாய் காதல் பழக!!

என் முதல் (??) காதல் முற்றுப்பெற்று மனதில்.
எனெக்கென்ற காதலி, குறும்புகள், குதூகலிப்பு
காதலித்தாள் என் உலகில் - உண்மையாய்
காலம் எமை பிரித்தது எனக் கொள்கிறேன்

சொல்ல வேறுச் செய்தியில்லை
செல்லமே தயவு செய்து பதில் அனுப்பாதே !!

-இராசிரா