Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Sunday, January 07, 2007

தாயே தண்ணீரூற்ற வா .. .. ...

அத்தனை புலங்களிலும் ஆவி பறக்கிறது
எத்தனை காலம் இந்நிலை நீடிக்குமோ?
ஆவி அழிய என்னை பாதிக்குமோ?
ஏவிய கொடுமையில் உளம் வதங்கிடுமோ?

பெண்களின் முகத்தில் மோகம் தெரிவதில்லை
கண்களுக்கு குறிஞ்சியும் குளிர்ச்சி தருவதில்லை
பாடல்கள் பரவசப்படுத்துவதில்லை – தற்போது
கற்பனையும் தோன்றுவதில்லை; குழலும் இசைப்பதில்லை !

சிந்தும் கண்களில் குருதி தெறிக்கிறது
ஏந்திச் செல்ல துணையாரும் இல்லை
சாவின் விளிம்புக்கே வந்தாயிற்று – தாயெ
எல்லைகள் என்னுள் குறுகித்தெரிவதேன் ?

தன்னம்பிக்கை தண்ணீரில் கலந்த சாம்பலாயிற்று
தர்மங்கள் ஏட்டினிலுள்ள எழுத்தாயிற்று
பக்தியும் பரவசமும் போலி பேச்சுகளாயின
படர்கின்ற துயரத்தால் அணுவெல்லாம் உணர்விழந்தது

தனிமை வாட்டுவதை யாரிடம் சொல்லுவேன்
தறிக்கெட்ட சிந்தனையை எத்தேரில் பூட்டுவேன்
தோல்விகள் தழுவிக் கொண்டால் தரணியில்
தன்னியல்புக் கெட்டு மரமாய் மாறிடுவரோ?

மவுனத்தை பரிசளித்து இன்பத்தை பறித்ததார்?
சோகத்தில் ஆழ்த்திவிட்டு சொந்தத்தை திருடியதார்?
மரமாய் போனதால் சிந்தனையும் அழிந்தது
சோர்வுடன் காண்பதால் சுற்றமும் மறைந்தது

உள்ள அழுத்ததில் எண்ணங்கள் குழம்பிற்று
தெள்ளதெளிவுகள் விடைப்பெற்று நாள்பலவாயிற்று
குட்டையின் நாற்றமென கூனிக்குறுக்கி என்னை
விட்டத்தில் வீசியது தன்மானத்தை மொத்தமாயுறிஞ்சி

வெறுப்புடன் வாழ்க்கைக்கு இலக்கணம் எழுதுகிறேன்
செருக்குடன் வாழ்கின்றனர் என்னை சிதைத்தவர்கள்
தக்கதாய் ஆறுதல் சொல்ல தாயே நீ வா
தாமதித்தால் தனலாய் தெறித்திருப்பேன்

ஒருநாள் வெளிக்கிளம்பும் என்னுள்ள குழம்பு
ஓர் அரக்கனாய் மாறியிருப்பேன் அன்று நான்
மிச்சமுள்ள ஈரமும் காய்ந்திருக்கும் - அங்கே
மிருகமாய், மாயனாய், பேய்பிசாசாய் தானிருப்பேன்

அவதாரம் எடுக்க வேண்டும் என்னை அழிக்க
அதற்குள் அழிந்திருக்கும் புவி பாதியும்
அத்தனையும் எதற்கு? என் வெளிநிலையகற்று...
அல்லையேல் சீக்கிரமாய் தண்ணீரை ஊற்றூ...