Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Wednesday, July 12, 2023

நிறம்

 

நீர்க்  கோர்த்த வண்ணம் வானவில்லில்  நிறைந்திடும்

ஈக் கோர்த்த வண்ணம் தீந்தேனில் இனித்திடும்

தீக் கோர்த்த வண்ணம் கார்வானை அளந்திடும் 

மைக் கோர்த்த வண்ணம் வரலாற்றில் நின்றிடும்

இம்மண் கோர்த்த வண்ணம் வசந்தத்தில் தெரிந்திடும்

நம்கண் கோர்த்த வண்ணம் அனுபவத்தில்  முடிந்திடும்

 

 

இறை கோர்த்த வண்ணமே  இம்மண்ணுயி ரென்றால்

இணை சேரும் காதலும்  வண்ண மன்றோ?

வண்ணங்களின் கூட்டேபேராற்ற லென்றால் வர்ணத்தால்

வகைபிரிக்கும் மனிதம் வன்ம மன்றோ ?


No comments: