சிந்தித்து பார்த்தேன் தோழி
சிலமணி நாம்
சந்தித்தால் என்னவென்று
சிந்தித்து பார்த்தேன் தோழி
எக்காளமிட்டேன் அடி
முக்காலம் உன்னோடு
முழுசாக நானிருப்பேனென
எக்காளமிட்டேன் அடி
கைத்தட்டி சிரித்தேனடி
நின் மெய்த்தட்டி மயங்கி
மெதுவாக கண்விழித்தேனென
கைத்தட்டி சிரித்தேனடி
கவிதைக்கு தாளெடுத்தேன் தோழி
கருவாய் உன்னுருவை மெதுவாய்
வருடி வாஞ்சையாய் உச்சிமுகர
கவிதை பிறந்ததடி தோழி
ஊர்வலம் செல்வோமடி
ஊர்கதை சொல்லவா நீ
உள்ளத்தில் விளக்கேற்று அடியே
மெள்ளமாய் உனை நுகர்வேன் அந்நொடியே
“கனவுகள் கலையட்டும்
காட்சிகள் தொடங்கட்டும்
கேசம் கலைந்து கட்டிலில் புரண்டது போதும்
மோசம் போகும்முன் போர்களம் புகுந்திடுவோம் !!”
1 comment:
You should submit your poems to some poetry website.
Post a Comment